Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவந்திபுரம் கோவில் நிர்வாகம் ... குமரி பகவதியம்மன் கோயிலில் ஆடி களப பூஜை துவக்கம் ஏராளமான பெண்கள் பங்கேற்பு குமரி பகவதியம்மன் கோயிலில் ஆடி களப ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சதுரகிரி மலையில் ஆடி அமாவாசை விழா
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

06 ஆக
2013
10:08

வத்திராயிருப்பு: விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி மலையில், 3 நாட்கள் நடைபெறும் ஆடி அமாவாசை திருவிழா, ஆக., 3 ல் துவங்கியது. அன்று, ஏராளமான பக்தர்கள் சுயம்பு லிங்கமாக எழுந்தருளிய சிவபெருமானை, தரிசனம் செய்து திரும்பினர். நேற்று, மலைப்பாதையில், அத்தியூத்து ஏற்றம், கோணத் தலைவாசல், வழுக்குப் பாறை ஆகிய இடங்கள் குறுகலாக இருப்பதால், அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அந்த இடங்களை கடந்து செல்ல, ஒரு மணி நேரத்திற்கு மேல், பக்தர்கள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மதுரை, திருநெல்வேலி, கோவில்பட்டி, விருதுநகர், தேனி, உள்ளிட்ட நகரங்களிலிருந்து, மலையடிவாரமான தாணிப்பாறை வரை, சிறப்பு பஸ்கள் இயக்கப் படுகின்றன. அடிவாரத்தில் போதிய இடமில்லாததால், பஸ்கள் வந்து திரும்புவதில் இடநெருக்கடி ஏற்படுகிறது. இன்று காலை 6 மணிக்கு, மூலவர்களான சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம், சுந்தர மூர்த்தி சுவாமிகளுக்கு, ஒரே நேரத்தில் 18 வகை அபிஷேகம் நடைபெறுகிறது. அதன் பிறகு, 7 மணி முதல், சுவாமிகள் அமாவாசை சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

உஷார் படுத்திய "தினமலர்: மலையில் நிலவும் வறட்சியால், குடிநீர் பிரச்னை உள்ளதை, "தினமலர் நாளிதழ், ஏற்கனவே சுட்டிக்காட்டியது. இதன் எதிரொலியாக, பக்தர்கள் தண்ணீர் பாட்டிலுடன் வருகின்றனர். அவர்களில் சிலர் கூறுகையில், "தினமலர் செய்தியை பார்த்த பிறகே, ஆளுக்கொரு தண்ணீர் பாட்டிலுடன் செல்வது என, முடிவெடுத்தோம். இல்லாவிட்டால், தண்ணீருக்கே பெரும் தொகை செலவழிக்க வேண்டியிருக்கும், என்றனர்.

காரையார் சொரிமுத்து அய்யனார் கோயிலில் இன்று ஆடி அமாவாசை திருவிழா

விக்கிரமசிங்கபுரம்: காரையார் காணிக்குடியிருப்பு சொரிமுத்து அய்யனார் கோயிலில் ஆடி அமாவாசை திருவிழா இன்று (6ம் தேதி) நடக் கிறது. காரையார் காணிக்குடியிருப்பு சொரிமுத்து அய்யனார் சாஸ்தாவாக காட்சியளித்து வருகிறார். தற்போது சொரிமுத்து அய்யனார் கோயில் இருக்கும் ஸ்தலத்தில் அகஸ்தியர் யோக நித்திரையில் இருக்கும்போது ஜோதி ஒன்று தோன்றியது. அப்போது அதை ஞான திருஷ்டியால் அகஸ்தியர் பார்த்தார். அப்போது லோகமாதாவாகிய பிரம்மரட்சஷி பரிவார மூர்த்திகளுடன் மகாலிங்கம் என்ற பெயர் தாங்கிய சிவபெருமானை பூஜித்து தியானம் செய்து கொண்டிருக்கும் காட்சி தெரிந்தது. அன்றைய தினம் ஆடி அமாவாசை தினமாக இருந்ததால் அந்த நாளில் இந்த ஸ்தலத்திற்கு வந்து வழிபாடு செய்பவர்களுக்கு அனைத்து கஷ்டங்களும் நீங்கி சுபிட்சமாக வாழ வேண்டுமென்று அகத்தியர் சிவபெருமானை வேண்டி கொண்டு வரம் வாங்கினார். அன்று மூலசாஸ்தாவானவர் சொரிமுத்து அய்யனார் என்று அழைக்கப்பட்டார். இதனால் ஆடி அமாவாசை திருவிழாவின் போது பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இக்கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வருவர். இன்று நடக்கும் இக்கோயிலின் ஆடி அமாவாசை திருவிழாவில் பக்தர்கள் பொங்கலிட்டு சுவாமிக்கு சிறப்பு வழிபாடு செய்வர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; காரைக்காலில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சுமார் 6 டன் பலவகையான மலர்கள், காய், பழவகையான ... மேலும்
 
temple news
நவக்கிரகங்களில் தொழில் கிரகமாக இருக்கும் சனி பகவான் வாக்கியப் பஞ்சாங்கப்படி  2026 மார்ச் 6 (விசுவாசு ... மேலும்
 
temple news
ஆனைமலை: ஆனைமலை, தர்மராஜா திரவுபதி அம்மன் கோவிலில் திருவிழாவில் விரதம் இருந்த பக்தர்கள் குண்டம் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் பக்தர்களே நேரடியாக அபிேஷகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருப்பட்டினம் ஜடாயுபுரீஸ்வர் கோவிலில் மாசிமத்திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar