சங்கராபுரம்:சங்கராபுரம் அடுத்த பூட்டை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா வரும் 9ம் தேதி துவங்குகிறது.சங்கராபுரம் வட்டம் பூட்டை கிராமத்தில் உள்ள பிரசித்திபெற்ற மாரியம்மன் கோவில் ஆடி மாத தேர் திருவிழா வரும் 9ம் தேதி துவங்குகிறது.விழாவையொட்டி அன்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. பின்னர் ஊரணி பொங்கல் நிகழ்ச்சியும், இரவு அம்மன் முத்து பல்லக்கில் வீதியுலாவும் நடக்கிறது.மறுநாள் அமைச்சர் மோகன் தலைமையில் தேரோட்டம் துவக்க விழா நடக்கிறது. சங்கராபுரம் ஒன்றிய சேர்மன் அரசு, இந்து அறநிலைய துறை இணை ஆணையர் செந்தில்வேலவன் முன்னிலை வகிக்கின்றனர். பாலப்பட்டு ஜாகீர் முத்துசாமி, வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைக்கிறார்.விழாவிற்கான ஏற்பாடுகளை பூட்டை ஊராட்சி தலைவர் கந்தசாமி, செம்பராம்பட்டு ஊராட்சி தலைவர் ரேணுகா மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.