திண்டிவனம்:திண்டிவனம் அடுத்த முருக்கேரி நாகாத்தம்மன் கோவிலில் சாகை வார்த்தல் நடந்தது.ஆடி மாத விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்து, சிறப்பு பூஜைகள் நடந்தன. கோவிலில் இருந்து பூங்கரகம் ஜோடித்து வீதியுலா நடந்தது. மதியம் சாகை வாத்தல் விழா நடந்தது. இரவு அம்மன் பூ அலங்காரத்தில் வீதியுலா நடந்தது. நேற்று காலை அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு நடந்தது.