பதிவு செய்த நாள்
06
ஆக
2013
11:08
திருநெல்வேலி:கொக்கிரகுளம் முத்தாரம்மன் சமேத குருசாமி கோயிலில் 3ம் ஆண்டு முளைப்பாரி திருவிழா இன்று (6ம் தேதி) நடக்கிறது.காலை 11 மணிக்கு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், மாலை 4 மணிக்கு முளைப்பாரி ஊர் சுற்றி வருதல், இரவு 7 மணிக்கு 1008 லட்டு அர்ச்சனை, அலங்கார தீபாராதனை, 9 மணிக்கு நையாண்டி மேளம், செண்டை மேளம் முழங்க முத்தராம்மன் திருவீதியுலாவும் நடக்கிறது.ஏற்பாடுகளை துணை ஆட்சியர் (பணி நிறைவு) சொக்கலிங்கம், என்.ஆர்.லெட்சுமணன், ம.சிவ.மகாலிங்கம், கோமதிநாயகம், ஆறுமுகம், விஜி செய்துள்ளனர்