பதிவு செய்த நாள்
07
ஆக
2013
11:08
பழநியில், குளிக்க ஒரு நபருக்கு ரூ.30 கட்டணமாக வசூலிப்பதால், பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். பழநிக்கு விழாக்காலங்கள் மட்டுமின்றி, அனைத்து நாட்களிலும் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும். மழை பொய்த்ததால் பழநியின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் வரதமாநதி, பாலாறு-பொருந்தலாறு அணைகள் வறண்டு காணப்படுகிறது. இதனால், பக்தர்கள் புனித நீராடும் சண்முகநதி, இடும்பன்குளம், வரட்டாறு ஆகியவற்றில் தண்ணீர் இல்லை. பக்தர்கள் தனியார் கட்டணக்குளியல் அறைகளை நாடி செல்வது அதிகரித்துள்ளது. அறறங்கு, ஒரு நபர் குளிப்பதற்கு, ரூ.30 ம், சிறுநீர் கழிக்க, ரூ.5 ம் வசூலிக்கப்படுகிறது. இதனால், குடும்பத்துடன் பழநிக்கு வரும் நடுத்தர மக்கள் குளிப்பதற்கு, அதிக தொகை செலவழிக்கவேண்டியதுள்ளது. நகராட்சி, தேவஸ்தானம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள இலவச குளியல், கழிப்பறைகளிலும் மறைமுகமாக கட்டணம் வசூலிக்கின்றனர். இந்த அடாவடி வசூலை தடுக்க, நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.