விழுப்புரம்:விழுப்புரம் அடுத்த திருவாமாத்தூர் அபிராமேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு நாளை 108 பால்குட அபிஷேகம் நடக்கிறது.விழாவையொட்டி, காலை 7:00 மணிக்கு முத்தாம்பிகை மற்றம் அபிராமேஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடக்கிறது. காலை 9:00 மணிக்கு கோவில் வளாகத்திலிருந்து மாடவீதிகளின் வழியாக 108 பால்குடங்கள் ஊர்வலமாக கொண்டு வந்து, முத்தாம்பிகைக்கு அபிஷேகம் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை கோவில் ஆய்வாளர் சுரேஷ், செயல் அலுவலர் வெங்கடகிருஷ்ணன் மற்றும் தொழிலதிபர் குபேரன் ஆகியோர் செய்துள்ளனர்.