செஞ்சி:கல்லடிகுப்பம் அங்காளம்மன் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு தீமிதி விழா நடந்தது.செஞ்சி தாலுகா கல்லடிகுப்பம் அங்காளம்மன் கோவிலில் ஆடி அமாவாசை உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு அம்மனுக்கு காலையில் விசேஷ திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது.மாலை 3:00 மணிக்கு பூங்கரக ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து 5:00 மணிக்கு தீமிதி விழா நடந்தது. இதில் காப்பு கட்டி விரதம் இருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீக்குண்டம் இறங்கினர்.இரவு 10:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.