பதிவு செய்த நாள்
09
ஆக
2013
10:08
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், வரும், 12ம் தேதி திருமலா திருப்பதி ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீனிவாச பெருமாள் ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. திருமலா திருப்பதி தேவஸ்தானம் தாஸ சாகித்ய ப்ராஜக்ட், மதுரை அகில பாரத ஹரிதாஸ சாகித்ய பிரசார, பிரகாஷன சமிதி மற்றும் கிருஷ்ணகிரி ஸ்ரீ முக்கிய பிராண பிரகலாத சேவா சமதி ஆகியோர் இணைந்து கிருஷ்ணகிரி மீனாட்சி மஹாலில் வரும், 12ம் தேதி காலை 5 மணிமுதல் இரவு எட்டு மணி வரை திருமலா திருப்பதி ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாள் ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. ஆனந்த தீர்த்த ஆச்சார் பகடல் தலைமை வகிக்கிறார். காலை, 5 மணிக்கு சுப்ரபாத சேவையும், 7 மணிக்கு திருமஞ்சன சேவையும், 8.45 மணிக்கு தோமால சேவையும், காலை, 10 மணி முதல், 1.30 மணிவரை ஸ்வாமி தரிசனமும், மாலை, 5 மணி முதல் இரவு, 7.30 மணிவரை ஊஞ்சல் சேவையும் நடக்கிறது.