பதிவு செய்த நாள்
10
ஆக
2013
10:08
மயிலம்:மயிலம் அடுத்த திருவக்கரை சந்திர மவுலீஸ்வரர், வக்கிர காளியம்மன் கோவிலில் ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடுநடந்தது. ஆடி வெள்ளியை முன்னிட்டு திருவக்கரை சந்திர மவுலிஸ்வரர், வக்கிர காளியம்மன் கோவில் ஆக, 9 காலை 6 மணிக்கு நடை திறந்து சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 11 மணிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. வக்கிர காளியம்மன் சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.கோவில் வளாகத்திலுள்ள விநாயகர், வரதராஜ பெருமாள், சந்திர மவுலீஸ்வரர், நடராஜர், லட்சுமி, பிரம்மா, அப்பர், சுந்தரர், மாணிக்க வாசகர், வக்கிர துர்க்கை, வக்கிர சனி, குண்டலி முனிவர் சுவாமி களுக்கு ஆடி வெள்ளியை முன்னிட்டு வழிபாடுகள் மகா தீபாரதனைகள் நடந்தன. கோவில் வளாகத்தில் ஏராளமானவர்கள் பொங்கலிட்டு சுவாமிக்கு படைத்தனர்.அறநிலையத்துறை நிர்வாகி மேனகா, ஊராட்சித் தலைவர் வேணு, ஆய்வாளர் சம்பத், மேலாளர் ரவி, உதவியாளர் பிரகாஷ் சுவாமியை தரிசனம் செய்தனர்.