தூங்கா நகரமான மதுரையில் முருகனின் முதலாம் படைவீடான திருப்பரங்குன்றமும், 6 வது படைவீடான பழமுதிர்சோலையும் உள்ளது. மலையடிவாரத்தில் அழகரையும் நடுவில் பழமுதிர்ச்சோலை முருகனையும் தரிசிப்பது விசேஷம்! இந்த மலையிலுள்ள நூபுர கங்கை தீர்த்தமும் மருத்துவ மகத்துவம் வாய்ந்தது. அதே போன்று, மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலருகில் உள்ள முக்தீஸ்வரர் கோயிலில்.... மாசி மாதம் இறைவனின் மேனியை சூரியன், தன் கிரணங்களால் தழுவி பூஜிப்பது, அற்புதம்தான்!