கோவை - மேட்டுப்பாளையம் சாலையில், கொண்டைவில் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் ஒன்றரை கி.மீ. தொலைவில் உள்ளது பாலாஜி கார்டன் பகுதி. இங்கேயுள்ள ஸித்தி விநாயகர், விசேஷமானவர்! வாரணாசி, நேபாளம், உஜ்ஜயினி போல், விநாயகரின் நேரடிப் பார்வையிலுள்ள இஷ்ட ஸித்தி ஸ்தூபியை இங்கே தரிசிக்கலாம். வெள்ளிக்கிழமைகளில், நம் வேண்டுதல்களை ஒரு சீட்டில் எழுதி, இந்த ஸ்தூபியில் கட்டிவிட்டு, விநாயகரைத் தரிசித்துச் சென்றால் போதும், 48 நாட்களுக்குள் நம் கோரிக்கைகளை ஈடேற்றித் தருவார் ஸித்தி விநாயகர் என்பது நம்பிக்கை!