கோவை அருகிலுள்ள பேரூர் பட்டீஸ்வரர் கோயில் ஆலயத்துக்கு வடக்கே நொய்யலாற்றங் கரையில் கோயில் கொண்டிருக்கிறார் ஜெயவீர ஆஞ்சநேயர். வியாசரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் இவர். ஆதியில் பரந்துவிரிந்திருந்த ஆற்றின் நடுவே மிக அழகாக கோயில் அமைந்திருந்து. 12 சனிக் கிழமைகள் இங்கு வந்து வழிபட, நினைத்தது நிறைவேறும் என பக்தர்கள் நம்புகின்றனர்.