கோவையில் இருந்து சுமார் 53 கி.மீ. தூரத்தில் உள்ள தாளக்கரையில், மகாலட்சுமியுடன் நின்ற கோலத்தில் அருள்கிறார் நரசிம்மர். இங்கே நரசிம்ம பீடத்தில் சக்கரமும், அர்த்த மண்டபத்தில் சாளக்கிராமமும் உள்ளன. முதலில் இந்த சாளக்கிராமமே நரசிம்மராக வழிபடப்பட்டதாம். எனவே இதை, ஆதி நரசிம்மர் என்கிறார்கள். ஏகாதசி, திருவோணம், பவுர்ணமி, அமாவாசை மற்றும் பிரதோஷ நாட்கள் விசேஷம்! இங்கே தரப்படும் எலுமிச்சை மற்றும் துளசி பிரசாதத்தை வீட்டில் பூஜையறையில் வைத்து வழிபட.. சகல நலன்களும் கைகூடும்.