பதிவு செய்த நாள்
12
ஆக
2013
10:08
திருப்பதி:திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில், அனைத்து சேவை டிக்கெட், ஆர்ஜித டிக்கெட்களில், மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக டிக்கெட் கட்டணம் கணக்கிட்டு வசூலிக்கும் நடைமுறை வந்திருக்கிறது. பத்மாவதி தாயார் கோவிலில், "வேத ஆசிர்வாதம் என்ற தினசரி சேவையை திருப்பதி தேவஸ்தானம் துவக்கி உள்ளது; கட்டணம், 500 ரூபாய்; ஒரு டிக்கெட்டில், இரண்டு பேருக்கு மட்டுமே அனுமதி; இதை வாங்குவோருக்கு மேல் துண்டு, ரவிக்கை துணி, லட்டு, வடை பிரசாதம் வழங்கப்படும்.கல்யாண உற்சவத்திற்கு இதுவரை, 500 ரூபாய் டிக்கெட்டில், ஐந்து பேர் அனுமதிக்கப்பட்டனர். இனி, இரண்டு பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்; ஊஞ்சல் சேவைக்கு 116 ரூபாய் டிக்கெட்டில், இரண்டு பேருக்கு அனுமதி உண்டு. வெள்ளிக்கிழமை அபிஷேக கட்டணம், 400 ரூபாய்.இதற்கு ஒருவருக்கு மட்டுமே அனுமதி. சனிக்கிழமை - புஷ்பாஞ்சலி சேவையில் இதுவரை, 1,500 ரூபாய் டிக்கெட்டில், ஐந்து பேர் அனுமதிக்கப்படுவர்; இனி, 300 ரூபாய் டிக்கெட்டில் ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவார், இதேபோல் வருடாந்திர விழா கட்டணங்களும் மாற்றப்பட்டுள்ளன.