கோவை : கோவையில் 124 இடங்களில் விநாயகர் சதுர்த்தி விழாவை சிவசேனா நடத்துக்கிறது என இக்கட்சியின் மாநிலத்தலைவர் குமாரராஜா தெரிவித்தார்.கோவையில் குமாரராஜா நிருபர்களிடம் கூறியதாவது:வரும் செப்., 9ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. சிவசேனா சார்பில், தமிழகத்தில் 5,004 இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவ உள்ளோம். ஐந்து நாட்கள் நடைபெறும் இவ்விழாவில், கோவையில் மட்டும் 124 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை öŒ#யப்பட உள்ளன. காஷ்மீர் எல்லையில் ஐந்து இந்திய ராணுவ வீரர்கள் பாகிஸ்தான் ராணுவத்தால் சுட்டு கொல்லப்பட்டதற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். மருதமலையில் காதல் ஜோடிகள் பக்தர்களின் மனம் புண்படும்படி நடந்து கொள்கின்றனர். இவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லாவிட்டால், சிவசேனா கட்சியினர் காதல் ஜோடிகளை பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பார்கள். இவ்வாறு, குமாரராஜா கூறினார். மாநில செயலாளர் சந்திரமோகன், கோவை தலைவர் முருகன் உடனிருந்தனர்.