கன்னிவாடி:கசவனம்பட்டி அருகே கோனூரில், வீரர், வீருநாகம்மன் கோயில் தளுகை விழா நடந்தது. விநாயகர் பூஜையுடன் துவங்கிய விழாவில், சிறப்பு அபிஷேகம் நடந்தது. விசேஷ மலர் அலங்காரத்துடன், பூஜைகள் நடந்தது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2வில், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. அன்னதானம் நடந்தது. சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.