சென்னை - நங்கநல்லூரில் குருவாயூரப்பன் ஆலயம் அமைந்துள்ளது. கண்ணனுக்கு முன்னால் பிறந்தவளான பகவதி எனப்படும் மஹாமாயா, இங்கே தனிச்சன்னதி கொண்டிருக்கிறாள். கோகுலாஷ்டமி அன்று, சரியாக 12 மணிக்கு மஹா மாயாவுக்கு அபிஷேக ஆராதனைகளுடன் பூஜை முடிந்தபிறகே, குருவாயூரப்பனுக்கு பூஜைகள் நடைபெறும்.