அரக்கோணம் - காஞ்சிபுரம் வழியில் உள்ள தலம் தக்கோலம். இங்குள்ள (திருஊரல்) மகாதேவர் ஆலயம் பிரசித்தி பெற்றது. இங்கே மூலிகைகளால் உருவான லிங்கத் திருமேனியுடன் திகழ்கிறார் ஈஸ்வரன். இவர் தட்சிணாயன காலத்தில் (6 மாதங்கள்) வெண்மையாகவும், உத்தராயன காலத்தில் கருமையாகவும் காட்சி தருகிறார். ரிஷப வாகனரான ஈசனுக்கு இங்கே சிம்ம வாகனம் என்பது சிறப்பம்சம்!