திருக்கனூர்:திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவிலில், சுதந்திர தினத்தையொட்டி, சமபந்தி விருந்து நடந்தது.கோவிலில், ஆக 16 காலை 8:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், 11:30 மணிக்கு சந்தனக்காப்பு அலகாரம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.தொடர்ந்து, மதியம் 1:00 மணிக்கு சமபந்தி விருந்து நடந்தது. இதில், வானூர் தாசில்தார் கோபால்சாமி, வானூர் ஒன்றிய அ.தி.மு.க., செய லாளர் பக்தவச்சலம், திருவக்கரை ஊராட்சி தலைவர் வேணு, ஒன்றிய கவுன்சிலர் ரவிச்சந்திரன், சப் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை அறநிலையத்துறை விழுப்புரம் உதவி ஆணையர் பிரகாஷ், செயல் அலுவலர் மேனகா செய்திருந்தனர்.