பதிவு செய்த நாள்
17
ஆக
2013
10:08
திருத்தணி:சுதந்திர தினத்தை முன்னிட்டு, திருத்தணி முருகன் கோவிலில், சிறப்பு பூஜை மற்றும் சமபந்தி விருந்து நடந்தது.சுதந்திர தினத்தை முன்னிட்டு, திருத்தணி முருகன் மலைக்கோவிலில், ஆக 16 மதியம், 12:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது.அதே நேரத்தில், உற்சவர், சண்முகர், ஆபத்சகாய வினாயகர், வள்ளி மற்றும் தெய்வானை ஆகிய சன்னதிகளிலும் சிறப்பு பூஜை நடந்தது. பின்னர், மலைக்கோவில் வளாகத்தில் உள்ள காவடி மண்டபத்தில், சமபந்தி விருந்து நடந்தது.கோவில் தக்கார் ஜெயசங்கர் தலைமையில் காவடி மண்டபத்தில், 2,500 பேருக்கு சமபந்தி விருந்து வழங்கப்பட்டது. இதில், நகராட்சி தலைவர் சவுந்தர்ராஜன், ஆணையர் பாலசுப்ரமணியம், ஒன்றிய சேர்மன் ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.