விழுப்புரம்:சிறுவந்தாடு அங்காளம்மன் ஆனந்தாய் பூங்காவனம் கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது.விழுப்புரம் அடுத்த சிறுவந்தாடு அங்காளம்மன் ஆனந்தாய் பூங்காவனம் கோவிலில் திருக்கல்யாணம் 11ம் தேதி நடந்தது. காலை 6 :00 மணிக்கு கணபதி ஹோமம், கோ பூஜை, நவகிரக பூஜை மற்றும் மகேஸ்வர பூஜையுடன் திருமண நிகழ்ச்சி துவங்கியது.பின் வேத ஆகம முறைப்படி சிவன்அங்காளம்மன் திருக்கல்யாணம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.