திருச்செந்தூர்: திருச்செந்தூர் கல்யாண கிருஷ்ணன் கோயிலில் ஆடி சுவாதியை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிப்பட்டனர். திருச்செந்தூர் ருக்மினி சத்யபாமா சமேத கல்யாண கிருஷ்ணன் கோயில் ஆடி சுவாதியை முன்னிட்டு அதிகாலை விஸ்வரூப தரிசனமும், காலை பக்தர்கள் பால்குடம் எடுத்து திருவீதி வலமும், ருக்மினி சத்யபாமா சமேத கல்யாண கிருஷ்ணன் மற்றும் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடந்தது. பின்னர் அன்னதானமும் நடந்தது. நிகழ்ச்சியில் முன்னாள் பொதுப்பணித்துறை பணியாளர் நடராஜன், இன்ஜி.,நாராயணன், வெங்கடேசன், நம்மாழ்வார், மயில் மணி மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை திருக்கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.