Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கிருஷ்ணன் கோயிலில் பால்குடம் ... சீர்காழி சட்டைநாதர் கோவிலில் திருவாசகம் முற்றோதல் விழா! சீர்காழி சட்டைநாதர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
போத்தி நாராயண சுவாமி கோயிலில் வரும் 26ம் தேதி கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஆக
2013
11:08

ஏரல்: மணலூர் ஸ்ரீ போத்தி நாராயண சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் வரும் 26ம் தேதி நடக்கிறது ஏரல் அருகேயுள்ள மணலூர் கிராமத்தில் அரியும் சிவனும் இணைந்து இருக்கக்கூடிய ஸ்ரீ காலக்குட்டி அம்மன் சமேத ஸ்ரீ போத்தி நாராயண சுவாமி கோயிலில் திருப்பணிகள் நடந்து கோயிலில் வீற்றிருக்கும் தெய்வவங்களுக்கு மகாகும்பாபிஷேகம் வரும் 26ம் தேதி நடக்கிறது. இதை முன்னிட்டு வரும் 24ம் தேதி முதல் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகிறது. 24ம் தேதி அதிகாலை 5 மணிக்கு மங்கள இசை, 5.30 மணிக்கு ஸ்ரீ மகா கணபதி அனுக்ஞை, கணபதி ஹோமம், கஜ பூஜை, தன பூஜை, கோபூஜை, துர்கா ஹோமம், மகாலட்சுமி ஹோமம், பூர்ணாஹூதி, தீபாராதனை ,மாலை 3.30 மணிக்கு தாமிரபரணி நதியிலிருந்து தீர்த்தம் கொண்டுவருதல், மாலை 6 மணிக்கு மேல் வாஸ்து சாந்தி, பிரவேசபலி, எஜமானர் சங்கல்பம், முதல் காலயாக பூஜை, தீபாராதனை நடக்கிறது. 25ம் தேதி காலை 9 மணிக்கு மேல் இரண்டாம் காலயாக பூஜை, வேதிகார்ச்சனை, வேதபாராயணம், தீபாராதனை மாலை 6 மணிக்கு மேல் மூன்றாம் காலயாக பூஜை, விசேஷசந்தி, பாபனாபிஷேகம், தீபாராதனை இரவு 8 மணிக்கு மருந்து சாத்துதல் நிகழ்ச்சிகள் நடக்கிறது. 26ம் தேதி மகாகும்பாபிஷேகம் நடக்கிறது. அன்று அதிகாலை 3 மணிக்கு மேல் நான்காம் காலயாக பூஜை ஆரம்பமாகிறது. அதிகாலை 5 மணிக்கு யாத்திரா தானம் நடக்கிறது காலை 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் அருள்மிகு ஸ்ரீ காலக்குட்டிசுவாமி, சுடலைமாடசுவாமி போத்தி நாராயணசுவாமி மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் நடக்கிறது. காலை 9 மணிக்கு மேல் மகாஅபிஷேகம், அலங்காரம், தீபாராதனையும் மதியம் அன்னதானமும் நடக்கிறது. கும்பாபிஷேகத்தை சிவஸ்ரீ ஐயப்பபட்டர் நடத்தி வைக்கிறார். கும்பாபிஷேக ஏற்பாடுகளை தலைவர் சுடலைமுத்து நாடார், துணைத்தலைவர் பொன்ராஜ் நாடார், மற்றும் கோயில் பூசாரி துரைராஜ் நாடார் தலைமையில் திருப்பணி கமிட்டி உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மார்கழி பிரதோஷம் சிவ வழிபாட்டிற்கு உகந்த சிறந்த நாள். 2026ம் ஆண்டின் தொடக்கத்திலேயே பிரதோஷம் வருவது ... மேலும்
 
temple news
சென்னை: 2025 ம் ஆண்டு இனிதே நிறைவடைந்து 2026 ம் ஆண்டு பிறந்ததையொட்டி, மக்கள் உலகம் முழுவதும் புதிய ஆண்டை ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜருக்கு, வெளிநாட்டு பக்தர், ரூ. 25லட்சம் மதிப்புள்ள நவரத்தின ஆபரணம் ... மேலும்
 
temple news
புதுச்சேரி; ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மணக்குள விநாயகர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் ... மேலும்
 
temple news
புதுச்சேரி; புத்தாண்டை முன்னிட்டு புதுச்சேரியை அடுத்த பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் 36 அடி உயர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar