பழநி: பழநி மலைக்கோயில் ரோப்கார், 75 நாட்களுக்குபின், இன்று முதல் பக்தர்கள் பயன்பாட்டிற்காக இயக்கப்படுகிறது. கடந்த, ஜூன் 5ல் பழநி மலைக்கோயில் ரோப்கார் மேல்தளத்திலுள்ள "ஷாப்ட் பழுது காரணமாக, 8 பெட்டிகள் 200 அடி உயரத்தில் தொங்கியது. டோலிச்சேர் மூலம் பக்தர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். கொல்கட்டாவிலிருந்து வரவழைக்கப்பட்ட, புதிய "ஷாப்ட் ரோப்காரில் பொறுத்தப்பட்டு, பெட்டிகள் கீழே இறக்கப்பட்டது. சமீபத்தில் சோதனை ஓட்டம் நடந்தது. ஆக.17ல், ரோப்கார் கமிட்டிஆய்வு செய்தது. அவர்கள் அறிக்கையையடுத்து, இன்று ரோப்கார் பக்தர்கள் பயன்பாட்டிற்காக இயக்கப்படுகிறது. காலை 8 மணிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பக்தர்கள் பயன்பாட்டிற்கு ரோப்கார் இயக்கப்படும், என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.