காஞ்சிபுரம்: களக்காட்டூர் அக்னீஸ்வரர் கோவிலில், பிரதோஷ வழிபாடு நடந்தது.காஞ்சிபுரம் அடுத்த, களக்காட்டூரில் அக்னீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், மாதந்தோறும் பிரதோஷ தினத்தில், நந்தி தேவருக்கு சிறப்பு பூஜை மற்றும் மலர் அலங்காரம் நடைபெறும்.ஆவணி மாதம் பிரதோஷத்தை முன்னிட்டு, நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு, அக்னீஸ்வர் சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமியை வழிபட்டனர்.