Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அக்னீஸ்வரர் கோவிலில் பிரதோஷ வழிபாடு! பெருமாள் கோயில் புதிய தேர் இறுதிகட்ட பணியில் தொய்வு பெருமாள் கோயில் புதிய தேர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

20 ஆக
2013
10:08

மத்தூர்: திரவுபதியம்மன் கோவிலில் நடந்த, தீமிதி திருவிழாவில், 2,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி தீ மிதித்தனர்.திருத்தணி ஒன்றியம், மத்தூர் கிராமத்தில், திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தீ மிதி திருவிழா சிறப்பாக நடந்து வருகிறது. 68ம் ஆண்டு தீமிதி திருவிழா, 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

திருக்கல்யாணம்: தினமும், காலை 8:00 மணிக்கு மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மாலை, 3:00 மணி முதல் மாலை, 6:00 மணி வரை பள்ளிப்பட்டு பஞ்சாட்சரத்தின் மகாபாரத சொற்பொழிவு நடந்தது.13ம் தேதி உற்சவர் திரவுபதியம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம், 14ம் தேதி சுபத்திரைக் கல்யாணம் நடந்தது. 16ம் தேதி அர்ஜுனன் தபசும், நேற்று முன்தினம் காலை, 8:00 மணிக்கு துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, அம்மன் வளாகத்தில் கூழ்வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர், திரளான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். மாலை, 6:30 மணிக்கு, 2,000க்கும் மேற்பட்ட பக்தர்கள், காப்பு கட்டி விரதம் இருந்து, தீமிதித்தனர். பட்டாபிஷேகம்இதில், மத்தூர், மூலமத்தூர், கொத்தூர், புச்சிரெட்டிப் பள்ளி உட்பட சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, 5,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். இரவு, 7:30 மணிக்கு வாண வேடிக்கையுடன் உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று காலை, 11:00 மணிக்கு தர்மர் பட்டாபிஷேகம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: வடபழனி முருக பெருமான் கோவிலில், மூன்று நாள் தெப்பத் திருவிழா நேற்று துவங்கியது. இதில், நேற்று ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார் பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம் நடந்தது.வில்லியனுார் பெருந்தேவி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி தோப்படி மாரியம்மன் கோயிலில் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: உள்ளாவூரில் பழுதடைந்துள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலை புனரமைக்க வேண்டும் என, ... மேலும்
 
temple news
செய்யூர்:  சேம்புலிபுரம் கிராமத்தில் உள்ள ஆறுமுக பக்த ஆஞ்சநேயர் கோவிலில் சீதா ராமர் திருக்கல்யாணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar