கடையநல்லூர்: சாம்பவர்வடகரை சுவாமி அய்யப்பன் கோயிலில் அன்னை காயத்ரி வழிபாடு இன்று (21ம் தேதி) நடக்கிறது. அன்னை காயத்ரி சிறப்பு அபிஷேகம் காலை 9 மணிக்கு துரைதம்பிராஜ்பாண்டியனார் சண்முகவடிவு ஆகியோர் நடத்துகின்றனர். 10 மணிக்கு காயத்ரி மந்திர ஜெபம், ஆய்க்குடி அமர்சேவா ராஜேஸ்வரன் குழுவினரால் நடத்தப்படுகிறது. அதனை தொடர்ந்து 12 மணிக்கு சுவாமி அய்யப்பனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடக்கிறது. மாலை 5 மணிக்கு அன்னை காயத்ரி சிறப்பு வழிபாடும், மாலை 6 மணிக்கு 18 திருப்படி பூஜைகளும் நடக்கிறது. நிகழ்ச்சியினை செங்கோட்டை பண்டாரம், அண்ணாமலையம்மாள் ஆகியோரும், 7 மணிக்கு நடக்கும் சப்பர ஊர்வலத்தினை சாம்பவர்வடகரை ராமகிருஷ்ணன் அன்னக்கிளி ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர். ஏற்பாடுகளை அய்யப்பன் கோயில் அடியார்கள் செய்துள்ளனர்.