பதிவு செய்த நாள்
21
ஆக
2013
11:08
சேலம்: சேலம், கருங்கல்பட்டி ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், பூணூல் பண்டிகையையொட்டி, வீரகுமாரர்கள் கத்தி போட்டு, நேர்த்திக் கடன் செலுத்தினர். சேலம் கருங்கல்பட்டி ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், நேற்று சவுடேஸ்வரி அம்மனுக்கு, திருமஞ்சனம் செய்யப்பட்டு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, விக்னேஸ்வர பூஜை, புண்யாஹாசனம், கணபதி ஹோமம், காயத்ரி ஹோம், லட்சுமி ஹோமம், ஜெயாதி ஹோமம் நடத்தப்பட்டு, பூணூல் அணிவிக்கப்பட்டது. மதியம், அம்மன் திருவீதி உலா நடந்தது. இதில், கருங்கல்பட்டி வீரகுமாரர்கள் கத்திபோட்டு நேர்த்திக் கடனை செலுத்தினர். இரவில், வேதோக்த மந்திர புஷ்பங்களுடன் அம்மனுக்கு மஹா தாளிகை பூஜை, தீபாராதனை செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை, ராமலிங்க சௌடேஸ்வரி அம்மான் கோவில் நிர்வாக கமிட்டி, கருங்கல்பட்டி வீரகுமாரர்கள் கமிட்டி நிர்வாகிகள் செய்தனர்.