பதிவு செய்த நாள்
21
ஆக
2013
11:08
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியபுரம் நாடார் தெரு மாரியம்மன் கோவில் கொடை விழா நேற்று நடந்தது. கொடை விழாவில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்ச்சை செலுத்தினர்.திருச்செந்தூர் - சுப்பிரமணியபுரம் நாடார் தெருவில் உள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவில் கொடைவிழா நேற்று நடந்தது. கொடைவிழாவிற்கான கால்நாட்டு விழா கடந்த 13ம் தேதி காலை நடந்தது. கொடைவிழாவை முன்னிட்டு கடந்த 19ம் தேதி இரவு வில்லிசையும், அம்பாளுக்கு சந்தனகாப்பு குடி அழைப்பு தீபாராதனையும், அம்மன் கும்பம் எடுத்து வீதி வலம் வருதலும் நடந்தது. கொடை விழாவின் முக்கியநாளான நேற்று காலை ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு பால்குடம் எடுத்து ரதவீதி வலம் வந்து நேர்ச்சை செலுத்தினர். தொடர்ந்து அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகமும், சிறப்பு அலங்கார தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து அம்மன் கும்பம் எடுத்து வீதிவலம் வந்து பக்தர்களுக்கு ஆசி வழங்கினர். மாலையில் மஞ்சள் நீராட்டும், இரவு சிறப்பு அபிஷேகமும் நடந்தது, அதனைத்தொடர்ந்து இரவு 9 மணிக்கு முளைப்பாரி எடுத்து ரதவீதி வலம் வந்து திருக்கோவில் சேர்ந்தது. நள்ளிரவு அம்மனுக்கு சிறப்பு புஷ்ப அலங்கார தீபாராதனை நடந்தது. விழாவில் இன்று அதிகாலை 4 மணிக்கு படைப்பு தீபாராதனையும் பகல் 12 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையும் அம்மன் வீதிஉலா, மஞ்சள் நீராட்டும், மாலை 5 மணிக்கு முளைப்பாரி எடுத்து கடலில் செலுத்துதலும் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் சிறுமிகளின் கும்மி கோலாட்டமும், வில்லிசை, நையாண்டி மேளம், வாணவேடிக்கை, மற்றும் கலைநிகழ்ச்சிகளும் நடக்கிறது. கொடைவிழாவில் திருச்செந்தூர் டவுண் பஞ்சாயத்து சேர்மன் சுரேஷ்பாபு, ஊர்தலைவர் முருகன், தேமுதிக ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், பாரதீய ஜனதா மாவட்ட பொதுச்செயலாளர் செந்தில்வேல், முன்னாள் திமுக ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் மணல்மேடு சுரேஷ், அதிமுக நகர செயலாளர் மகேந்திரன், ரஜினிகாந்த் நற்பணி மன்ற நகரச்செயலாளர் செந்தில்குமார், திருச்செந்தூர் வட்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தலைவர் முருகேசன், தேமுதிக நகரச்செயலாளர் சேகர், வசந்த், அஜய், நகர பொருளாளர் வீரமணி, தலைவர் ராமன், 4வது வார்டு செயலாளர் நாராயணமூர்த்தி, ராணி பேன்சி ஜெகன், 4வது வார்டு கவுன்சிலர் சுதாகர், அதிமுக 4வது வார்டு செயலாளர் மணிகண்டன், சதீஸ்குமார், மணல்மேடு மாரிமுத்து, முருக விலாஸ் பஞ்சாமிர்தம் வேலாயுதப்பெருமாள், தமிழக மாணவர் இயக்க திருச்செந்தூர் சட்ட மன்ற தொகுதி செயலாளர் ராமச்சந்திரன், கூட்டுறவு சங்கத்தலைவர் மனோகரன், அஜித் நற்பணி இயக்க நயினார், வேல்ராமக்கிருஷ்ணன், இந்து முன்னணி முத்துராஜ் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் நிர்வாக கமிட்டி தலைவர் முருகன், செயலர் செந்தில்குமார், பொருளாளர் ஜெகன், துணைத்தலைவர் செந்தில்வேல், துணைச்செயலாளர் செந்தில்குமார், கணக்காளர் சந்தனக்குமார், கொடைவிழாகமிட்டி சுரேஷ்பாபு, செந்தில்குமார் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.