பதிவு செய்த நாள்
22
ஆக
2013
11:08
தர்மபுரி: தர்மபுரி டவுன் விருபாட்சிபுரம் ராகவேந்திர ஸ்வாமி கோவிலில், 342ம் ஆண்டு ஆராதனை விழா, நேற்று துவங்கியது. விழாவையொட்டி கடந்த, 19ம் தேதி சாகபூஜை, கோ பூஜை நடந்தது. 20ம் தேதி சத்தியநாராயண பூஜை, ரிக் வேத உபாகர்மம் நடந்தது. நேற்று காலை பூர்வாதரனையும் நடந்தது. விழாவின், முக்கிய நாளான இன்று காலை, 10 மணிக்கு மத்திய ஆராதனையும், இரவு, 7 மணிக்கு பரிமளா வியாசராவ் குழுவினரின் கலை நிகழ்ச்சியும், 23ம் தேதி காலை, 10 மணிக்கு உத்ராதரனையும், இரவு, 7 மணிக்கு பல்லடம் சகோதரிகள் ஜெயலட்சுமி ராஜேஸ்குமார், காயத்ரி சீனிவாசன் குழுவினரின் கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. வரும், 24ம் தேதி காலை, 10 மணிக்கு உற்சவமும், 11 மணிக்கு சீனிவாச கல்யாணமும், மாலை, 6 மணிக்கு லட்சுமி சோபாஷன பூஜையும் நடக்கிறது. விழா நாட்களில் தினந்தோறும் காலை, 5 மணிக்கு சுப்ரபாதமும், 6 மணிக்கு வேதபாராயணமும், 8 மணிக்கு பஞ்சாமிர்த அபிஷேகமும், 10 மணிக்கு பல்லக்கு உற்சவமும், 10.30 மணிக்கு கனக பூஜையும், 11 மணிக்கு ரதோர்சவமும், 12 மணிக்கு மகாதீபாராதனையும், 12.30 மணிக்கு அலங்கார பந்தியும், 1 மணிக்கு தீர்த்த பிரசாதமும், மாலை, 6 மணிக்கு உற்சவமும், தீபாராதனையும் நடக்கிறது.