பதிவு செய்த நாள்
22
ஆக
2013
11:08
கள்ளக்குறிச்சி: வடக்கனந்தல் தியாகப்பாடி அம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது. கள்ளக்குறிச்சி அடுத்த வடக்கனந்தல் தியாகப்பாடி அம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 13ம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. கோமுகி அணையிலிருந்து சக்தி அழைத்தல், பொங்கல் வைத்தல் மற்றும் தினம் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை 10 மணியளவில் தியாகப்பாடி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்து வைத்து தேர் வடம் பிடித்தல் நடந்தது. கலெக்டர் சம்பத் தலைமை தாங்கினார். அமைச்சர் மோகன் தேர் வடம் பிடித்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். பரம்பரை அறங்காவலர் திருநாராயணன் வரவேற்றார். டி.ஆர்.ஓ., பிருந்தாதேவி, மாவட்ட திட்ட இயக்குனர் முத்துமீனாள், ஆர்.டி.ஓ., ராஜசேகரன், முன்னாள் எம்.எல்.ஏ., உதயசூரியன், ஒன்றிய சேர்மன்கள் ராஜசேகர், அரசு, நகர சேர்மன் பாலகிருஷ்ணன், பேரூராட்சி சேர்மன் வெங்கடேசன், கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் வடிவேல், உட்பட பலர் பங்கேற்றனர். எஸ்.பி., மனோகரன் தலைமையில் டி.எஸ்.பி., பாண்டியன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.