8 என்ற எண் நலன் பயக்கும் எண்ணே ஆகும். பகவான் கிருஷ்ணன் 8வது மகனாக அஷ்டமி திதியில் பிறந்தார். 8வது அவதாரம் தான் கிருஷ்ணர் அவதாரம். மனிதனின் உயரம் அவரது கையால் 8 சாண் ஆகும். சூரிய கதிர் பூமியை அடைய 8 நிமிடம் ஆகிறது. ஜாதகத்தில் எட்டாம் இடம் ஆயுள் ஸ்தானமாகும். சிவனின் குணங்கள் 8 - எட்டு வீரச்செயல்கள் நடந்தன. 8 வீரட்டத் தலங்கள் ஆகும். முனிவர்கள் அடையும் சித்தி 8, ஐஸ்வரியம் 8, திசையும் 8, விக்ரகங்கட்கு சார்த்துவது அஷ்டபந்தனம் என்னும் 8 வகை மூலிகைகளால் ஆன மருந்து ஆகும். ஈஸ்வரன் என பின் பெயர் பட்டம் பெற்ற சனியின் ஆதிக்க எண் 8.