முத்தாரம்மன் கோயிலில் கொடைவிழா திரளான பக்தர்கள் வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஆக 2013 11:08
ஏரல்: மாவடிப்பண்ணை முத்தாரம்மன் கோயிலில் (திருமால் பூஜை) நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். மாவடிப்பண்ணை 18 பங்கு நாடார் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட முத்தாரம்மன் கோயில் கொடைவிழா 20ம் தேதி நடந்தது. கொடைவிழா அன்று காலை செண்டை மேளவாத்தியங்களுடன் பால்குடம் எடுத்துவருதல், மதியம் சிறப்பு பூஜை, அலங்காரத்துடன் மதிய கொடையும், இரவு முளைப்பாரி எடுத்தல், நேமிசம் கொண்டுவருதல், கரகாட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. இரவு 12 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை, அலங்கார பூஜை, வானவேடிக்கையை தொடர்ந்து அம்மன் பொன் சப்பரத்தில் நகர் உலா சென்ற நிகழ்ச்சி நடந்தது. கொடைவிழாவில் வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் மற்றும் 18 பங்கு நாடார் சமுதாய மக்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர். நேற்று இரவு இன்னிசை கச்சேரி நடந்தது. கொடைவிழா ஏற்பாடுகளை மாவடிப்பண்ணை 18 பங்கு நாடார் சமுதாய மக்கள் செய்திருந்தனர்.