திருச்செந்தூர்: திருச்செந்தூரில் ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு பூநூல் மாற்றும் வைபவம் நடந்தது. ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் அவிட்ட நட்சத்திரமும் பவுர்ணமி திதியும் சேர்ந்து வரும் நாளில் ஆவணி அவிட்டம் வைபவம் தொன்றுதொட்டு கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு ஆவணி அவிட்டம் கொண்டாடப்பட்டது. திருச்செந்தூரில் ஆயிரக்கணக்கான பிராமணர்கள் முருகன் கோயில் வாசலில் மகாசங்கல்பம் செய்து கடலில் புனித நீராடினார்கள். தொடர்ந்து முருகன் கோயிலில் உள்ள பெருமாள் சன்னதியில் ரிக் வேதத்தை சேர்ந்தவர்களும், மேல வாசல் விநாயகர் சன்னதி அருகே யஜூர் வேதத்தை சேர்ந்தவர்களும் பூநூல் மாற்றிக் கொண்டார்கள். அதனைத்தொடர்ந்து முருகனை வழிப்பட்டு மேளத்தாளத்துடன் வேதமந்திரங்கள் முழங்க ஊர்வலமாக சென்றார்கள். ஆவணி அவிட்டத்தை தொடர்ந்து காயத்திரி ஜெபம் நடந்தது.