மூணாறு: மூணாறில் எஸ்.என்.டி.பி., அமைப்பு சார்பில், ஸ்ரீநாராயண குரு ஜெயந்தி விழா நடந்தது.இதையொட்டி நகரில் ஊர்வலம் நடந்தது.அதன்பின் நகரின் மையப்பகுதியில் அமைப்பின் கொடியை இப்பகுதி செயலாளர் கணேசன் சேலய்க்கல் ஏற்றினார்.இனிப்புகள் வழங்கப்பட்டது. தலைவர் பொன்னுசந்திரன் மற்றும் நிர்வாக குழுவைச் சேர்ந்த முருகன்,விஜயகுமார், முத்துராஜ்குமார், நந்தன், ராஜூதர்ஷனா, ஜிமோன் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.