மயிலம்:மயிலம் தண்டு மாரியம்மன் கோவிலில் ஆவணி உற்சவம் நடந்தது.மயிலம் பாளைய வீதியிலுள்ள தண்டு மாரியம்மன் கோவில் ஆவணி உற்சவத்தை முன்னிட்டு அம்மனுக்கு காலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.காலை 8 மணிக்கு குளக்கரையிலிருந்து பக்தர்கள் பூங்கரத்தை முக்கிய வீதிகள் வழியாக எடுத்து வந்தனர். பகல் 12 மணிக்கு அம்மனுக்கு மகா தீபாராதனை நடந்தது. 1 மணிக்கு கோவில் வளாகத்தில் சாகை வார்த்தல் நடந்தது. இரவு 8 மணிக்கு அலங்கரித்த வாகனத்தில் அம்மன் வீதியுலா நடந்தது.