பதிவு செய்த நாள்
24
ஆக
2013
10:08
மோகனூர்: ராகவேந்திரா ஸ்வாமிகளின் பிருந்தாவன சன்னதியில், 342வது ஆராதனை மஹோத்ஸவ விழா, கோலாகலமாக நடந்தது. அதில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ஸ்வாமியை வழிப்பட்டனர். மோகனூர் காவிரி ஆற்றின் கரையில், பிரசித்தி பெற்ற ராகவேந்திரா ஸ்வாமிகளின் பிருந்தாவன சன்னிதானம் உள்ளது. இங்கு, ஆண்டு தோறும், ஸ்வாமியின் ஆராதனை மஹோத்ஸவ விழா, வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு விழா, கடந்த, 21ம் தேதி துவங்கியது. அன்று காலை, தேவாரநாமம், மாலை, கோவை முரளிகிருஷ்ணா குழுவினரின், இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. ஆக, 23 காலை, 6 மணிக்கு, நிர்மால்ய சேவை, 8 மணிக்கு, கனகாபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம், பகல், 12 மணிக்கு, அலங்கார சேவையும் நடந்தது. அதை தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில், ஸ்வாமி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பகல், 1.30 மணிக்கு, விழாவில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு, 8 மணிக்கு, தொட்டில் உற்சவம் நடந்தது. விழாவில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.