பதிவு செய்த நாள்
24
ஆக
2013
10:08
ராசிபுரம்: ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை, வடுகம் நாடார் தெருவில், ஒண்டி முனியப்பன் கோவில் உள்ளது. இக்கோவிலில், முப்பூஜை விழா, ஆகஸ்ட், 25ம் தேதி கோலாகலமாக நடக்கிறது. விழாவை முன்னிட்டு, கடந்த, 19ம் தேதி, பூச்சாட்டுதலுடன் விழா துவங்கியது. ஆகஸ்ட், 25ம் தேதி அதிகாலை, 5 மணிக்கு, கட்டில் பூஜை, 7 மணிக்கு, ஸ்வாமி புறப்பாடும் நடக்கிறது. தொடர்ந்து, காலை, 9 மணிக்கு, பொங்கல் வைத்தல், பகல், 12 மணிக்கு, முப்பூஜையும் நடக்கிறது. அன்று இரவு, 7 மணிக்கு, பெரும்பூஜையும் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.