தியாகதுருகம்: பிரிதிவிமங்கலம் காலனி முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது. தியாகதுருகம் அடுத்த பிரிதிவிமங்லகம் காலனியில் உள்ள முத்துமாரியம் மன் கோவில் திருவிழா கடந்த 23ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினமும் இரவு அம்மன் திருவீதியுலா நடந்தது. கோவில் வளாகத்தில் மாரி யம்மன் சரித்திர பாரத பாடல் சொற்பொழிவு நடந்தது. கடந்த 30 ம் தேதி மோடி எடுத்தல், காத்தவராயன், ஆரியமாலா திருக் கல்யாண உற்சவம் நடந்தது. பின், கழுமரம் ஏறும் நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று முன்தினம் மதியம் காளி கோட்டை இடித்தல் நிகழ்ச்சியும், மாலை 4 மணிக்கு அம் மனை தேரில் வைத்து பக்தர்கள் வடம் பிடித்து ஊர்வலமாக இழுத்து சென்றனர்.