பெரியதாழை: படுக்கப்பத்து கீழத்தெரு முத்தாரம்மன் கோயில் கொடை விழா நடந்தது. முதல் நாளன்று காலையில் கணபதி ஹோமமும், மாலையில் அம்பாளுக்கு அலங்கார பூஜையும், இரவில் முளைப்பாரி மற்றும் மாவிளக்கு எடுத்து வருதலும், இரண்டாம் நாளன்று மாலையில் மஞ்சள் பெட்டி ஊர்வலம், அம்மன் நகர்வலம் வருதலும், அம்மன் மஞ்சள் நீராடுதலும் நடந்தது. இரவில் நடந்த திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர், மூன்றாம் நாளன்று காலையில் அம்மன் உறை எடுத்தல் நடந்தது. பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை தரிசனம் செய்தனர். மூன்று நாட்கள் விழாவின் போது மாலையிலும், இரவிலும் அன்னதானம் நடந்தது.