பதிவு செய்த நாள்
02
செப்
2013
11:09
வீரகேரளம்புதூர்: வாடியூர் தூய திருமுழுக்கு யோவான் ஆலய பெருவிழா தேர்பவனி நடந்தது. பாளை., மறைமாவட்டத்தில் சிறப்புப் பெற்ற வாடியூர் தூய திருமுழுக்கு யோவான் ஆலயப் பெருவிழா கடந்த ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி பத்து நாட்கள் நடந்தது. விழா நாட்களில் தினமும் மாலை 6 மணிக்கு சிறப்புத்திருப்பலி நிறைவேற்றப்பட்டது. பாளை., மறைமாவட்டத்தின் பல பங்குகளிலிருந்தும் பங்குத் தந்தையர்கள் வந்திருந்து மறையுரையும், நற்கருணை ஆசீரும் வழங்கினர். தொடர்ந்து நற்செய்திப் பெருவிழாவும், வாடியூர் பள்ளிகளின் ஆண்டு விழாவும், விவிலியத்திலிருந்து இறைகுழந்தைகளுக்கு வினாடி-வினாப் போட்டியும் நடந்தது. செப்டம்பர் முதல் நாளில் நேற்று புனித யோவானின் பெருவிழா கொண்டாடப்பட்டது. அலங்காரத் தேரில் புனித மரியன்னையும், புனித யோவானும் வீதிகளில் வலம் வந்து இறைமக்களுக்கு ஆசீர் வழங்கினர். முன்னதாக பங்குத்தந்தை அந்தோணி சேவியர், சகோதரர் நீசரேன் ஜெபித்து தேர்ப்பவனியைத் துவக்கி வைத்தனர். அதனைத்தொடர்ந்து நன்றித் திருப்பலியுடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை பங்குத்தந்தை அந்தோணி சேவியர் தலைமையில் ஊர் தலைவர் சேசுராஜன், தர்மகர்த்தா மரியசூசை, கட்டளைதாரர் அந்தோணி சேவியர், உபதேசியார் சவரிமுத்து மற்றும் அருட்சகோதரர்கள், அருட்சகோதரிகள், அன்பியங்கள், இறைமக்கள் இணைந்து செய்தனர்.