திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அடுத்த பரனூர் கிருஷ்ணர் கோவில் பிரம்மோத்சவ விழாவில் நேற்று தேரோட்டம் நடந்தது.திருக்கோவிலூர் அடுத்த பரனூர் கிருஷ்ணர் கோவிலில் பிரம்மோத்சவ விழா கடந்த மாதம் 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று தேரோட்டம் நடந்தது.காலை 8.00 மணிக்கு ராதிகாரமண பக்த கோலாகலனை மூலஸ்தானத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட தேருக்கு மலர்தூவி அழைத்து வந்தனர். கிருஷ்ணபிரேமி சுவாமிகள் தேரோட்டத்தை துவக்கி வைத்தார்.பக்தர்கள் கோவிந்தா கோஷம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக தேரை இழுத்துச் சென்றனர். மாலை 4 மணிக்கு தேர் நிலையை அடைந்தவுடன் சுவாமி தீர்த்தவாரிக்கு புறப்பாடாகி சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.