Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல் பக்கம் » ஜயதேவர் பாகவதம்
ஜயதேவர் பாகவதம்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

10 செப்
2013
04:09

இறைவன் திருவிளையாடல்களையும், பிரம்ம ஞானத்தையும் ஒருங்கே எடுத்துரைக்கும் நூல் ஸ்ரீமத் பாகவதம். அவதாரங்களில் நிகழ்ந்த அற்புதங்களையெல்லாம் அதில் காணலாம். பகவானது கட்டளைப்படி அந்தத் தெய்வத் திருநூலைப் பாமரரும் அறிந்து உய்யும்வண்ணம் ஜயதேவர் பாடி முடித்தார். பின்பு கிரவுஞ்ச மன்னரிடம் சென்று, மகாராஜா, இந்த பாகவதக் கதைகளை இசையோடு பாடி நல்ல முறையில் விளக்கம் கூறி பிரசங்கம் செய்யக்கூடிய பெரியவர்கள் கிடைப்பார்களானல் தங்கள் சபையிலேயே வாசிக்கலாம் என்றார் ஜயதேவர். சபை நிறைந்திருந்தது. வித்வான்கள் கூடியிருந்தார்கள். அச்சமயம் ஓர் அந்தணர் வந்து சேர்ந்தார். அவர் அரசனை அணுகி, அரசே, நான் இருப்பது கோகுலம். நான் வேதம் முதற்கொண்டு எல்லா சாஸ்திரங்களையும் கற்றிருக்கிறேன். பல ஊர்களுக்குச் சென்று பல பண்டிதர்களுடன் விவாதிருக்கிறேன். உங்கள் சமஸ்தானத்தில் ஜயதேவர் என்ற ஒருவர் இருப்பது தெரிந்து அவருடன் தர்க்கம் செய்யவே வந்தேன் என்றார். அவரது முகப்பொலிவைக் கண்ட ஜயதேவர் அவரைப் பணிந்து வணங்கி ஐயா ! இந்த ஜயதேவன் பண்டிதன் அல்லன். உங்களைப் போன்ற பெரியோர்களுக்குத் தொண்டு செய்வதுதான் என் லட்சியம் என்றார்.

ஜயதேவரைக் கண்டதும் அந்தணரின் புருவங்கள் சுருங்கி; கோபத்தால் கண்கள் சிவந்தன. நீ இப்படிப் பணிந்து பேசி நாடகமாடித்தான் உலகத்தை ஏமாற்றி வருகிறாயா? உன் தந்திரமெல்லாம் என்னிடம் பலிக்காது. உன் கையில் இருக்கும் ஏட்டுச்சுவடியைக் கொடு பார்க்கலாம். கண்டபடியெல்லாம் எழுதியிருக்கும் உன் அறியாமையை சபையினருக்கு எடுத்துக் காட்டுகிறேன். அதில் உள்ள குறைகளையெல்லாம் அம்பலமாக்குகிறேன் பார். கொடு அந்தச் சுவடியை! என்று கோமாகக் கேட்டு கைகளை நீட்டினார் அந்தணர். ஜயதேவர் பணிவுடன் அவரை வணங்கி, ஐயா! நான் மிகவும் சிறியவன். ஏதும் அறியாதவன். ஏதோ என் சிற்றறிவுக்கு எட்டியபடி கண்ணனின் திருவிளையாடல்களைப் பற்றி எழுதியிருக்கிறேன். உங்களைப் போன்ற பெரியோர்களிடம் காட்டவே கொண்டு வந்தேன். இந்த பாகவதத்தைப் பார்த்து உங்கள் முடிவைத் தெரிவிக்க வேண்டுகிறேன்! என்று கூறி சுவடியைக் கொடுத்தார். ஆ! என்ன சென்னாய்? பாகவதத்தை நீ புதுப் பித்திருக்கிறாயா? அவ்வளவு தைரியம் உனக்கு வந்து விட்டதா? சரி, பரவாயில்லை. சுவடியை நீயே வைத்துக்கொள்.

பழைய பாகவத சுலோகங்களை வரிசையாக நான் சொல்லிக்கொண்டே வருகிறேன். அவற்றை நீ எழுதிய சுலோகங்களுடன் ஒப்பிட்டுப் பார். உனது அறியாமையை நீயே உணர்ந்து கொள்வாய்! என்று சொல்லிய அந்தணர், பாகவத சுலோகங்களை ஒவ்வொன்றாக சொல்லத் தொடங்கினார். என்ன ஆச்சர்யம்! அந்தணர் பாடியது பழைய பாகவதமன்று. ஜயதேவர் சுவடியில் எழுதியிருந்ததையே அவர் சொல்லி வந்தார். ஜயதேவர் திகைத்துப் போனார். ஜயதேவர் எழுதி வைத்திருப்பதை பார்த்துப் படிப்பது போலவே அந்தணர் பாடினார். அரசரும் சபையோரும் மெய்மறந்து கேட்டுக் கொண்டிருந்தனர்.  அங்கங்கே மகிழ்ச்சி ஆராவாரம் செய்தனர். ஜயதேவரின் பாகவதம் அனைவருக்கும் தேவாமிர்தமாக இருந்தது. அந்தணர் இசையுடன் பாடிய பாகவதத்தை, அனைவரும் ஆர்வத்தோடு ரசித்துக் கேட்டனர். இந்த அற்புதமான கதையைக் கேட்க, சிவபெருமானும் அங்கே தோன்றினார். கண்ணபிரானைத் துதித்திருக்கும் இனிமையிலே ஈடுபட்டு, தாமே மெய் மறந்துவிட்டார் அந்த அந்தணர். சிவபெருமான் அந்த அந்தணரைப் பார்த்து, ஹே கேசவா, ஜனார்த்தனா! உன் மாயை யாருக்குத் தெரியும்? உன் அருளை நாடித் தவமிருக்கும் ஜயதேவரை ஆசீர்வதிப்பாயாக! என்றார் அதைச் செவியுற்ற பகவான் தன் சுய உருவில் தோன்றி, ஜயதேவா, நீ பாடிய பாகவதத்தை நானே நேரில் வந்து அரங்கேற்றம் செய்ய வேண்டும் என்ற ஆவலாலேதான் இந்தக் கோலத்தில் வந்தேன். சுகமுனிவரது பாகவதம் முழுமையும் படித்த பயனை உன் பாகவதத்தின் ஓர் அத்தியாயத்தைப் படித்தாலே அடைவார்கள் என்று வரமளிக்கிறேன் என்றார் ஸ்ரீமந் நாராயணன். ஒருபுறம் சிவபெருமானும் மற்றொரு புறம் ஸ்ரீமந் நாராயணனுமாகக் காட்சி தந்து மறைந்தார்கள். மகிழ்ச்சிப் பெருக்கால் மலர்ந்த கண்களுடன் அவர்கள் நின்ற இடத்தையே நெடுநேரம் மெய்மறந்து பார்த்தனர், ஜயதேவரும் கிரவுஞ்ச மன்னரும், சபையில் கூடியிருந்த மக்களும் பெறற்கரிய பேறாக எதிர்பாராமல் தமக்குக்  கிடைத்த இந்த திவ்ய தரிசனத்தினால் மெய்மறந்தார்கள்.

 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar