பதிவு செய்த நாள்
11
செப்
2013
11:09
தர்மபுரி: தர்மபுரி அடுத்த ஏ.செக்காரப்பட்டி, ஸ்ரீ குபேரஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா இன்று (செப்., 11) நடக்கிறது. இதையொட்டி நேற்று மாலை, 6 மணிக்கு அனுக்கை பூஜை, வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம், ரக்ஷõ பந்தனம், வேதிகை பூஜை, முதல் கால யாக வேள்வி, பூர்ணாஜூதி, தீபாரதனை நடந்தது. இன்று (செப்., 11) காலை, 7 மணிக்கு இரண்டாம்கால யாக சாலை பூஜை, தத்துவார்ச்சனை, நாடிசந்தானம், மஹாபூரணாஜூதி மற்றும் தீபாரதனை நடக்கிறது. காலை, 9.30 மணிக்கு ஸ்தூபி கும்பாபிஷேகமும், 10 மணிக்கு மஹா கும்பாபிஷேகமும் நடக்கிறது. ஏற்பாடுகளை உபயதார்கள், பரம்பரை பூசாரி மற்றும் ஊர்பொதுமக்கள் செய்துள்ளனர்.