மதுரை: மதுரை பொதுப்பணித்துறை வளாகம் ஸ்ரீ யோகவிநாயகருக்கு, சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பாலாபிஷேகம் நடந்தது. யாகசாலை பூஜை, தீபாராதனை நடந்தது. தலைமை பொறியாளர் தமிழரசன் தலைமையில், கண்காணிப்பு பொறியாளர் வள்ளியப்பன், உதவி பொறியாளர்கள் மோகன்குமார், தண்டபாணி பங்கேற்றனர். சுரேஷ் தலைமையில் பட்டர்கள் பூஜைகளை செய்தனர்.