திண்டிவனம்: ஓமந்தூர் பீமேஸ்வரர் கோவில் வரும் 16 ம் தேதி கும்பாபிஷேக விழா நடக்கிறது.திண்டிவனம் வட்டம் ஓமந்தூர் கிராமத்தில் உள்ள பாலாம்பிகை உடனுறை பீமேஸ்வரர் கோவில் புனரமைப்பு பணிகள் முடிந்து கும்பாபிஷேக விழா இன்று 11ம் தேதி காலை 9 மணிக்கு, கணபதி பூஜையுடன் துவங்குகிறது. 16ம் தேதி கோபுர கலசங்களுக்கும் மகா கும்பாபிஷேகம் காலை 9 மணிக்கு மேல் நடக்கிறது.