பதிவு செய்த நாள்
12
செப்
2013
10:09
திருப்பூர்: திருப்பூரில், விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு அமைக்கப்பட்ட விநாயகர் சிலை முன், காதல் ஜோடிக்கு சிவசேனா அமைப்பினர், திருமணம் நடத்தி வைத்தனர். திருப்பூரைச் சேர்ந்த தம்பதியினர், கோபால் - ராமாயியின் மகன், சங்கர், 24; கட்டட தொழிலாளி. உறவினரான, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த, செல்வம் - சுசீலா தம்பதியினரின் மகள், நதியா, 20. அங்குள்ள பனியன் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். சங்கர், நதியா, கடந்த மூன்றாண்டுகளாக காதலித்து வந்தனர்; திருமணத்துக்கு இரு வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர். பெற்றோருக்கு தெரியாமல் நதியா, நேற்று, திருப்பூர் வந்தார். சிவசேனா, மாவட்ட தலைவர் சரவணனிடம் காதல் ஜோடிகள் தஞ்சமடைந்தனர். நெசவாளர் காலனி ஸ்டாப்பில், விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலை முன், ஹோமகுண்டம் அமைத்து, இருவருக்கும் சிவசேனா அமைப்பினர், திருமணம் நடத்தி வைத்தனர். அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பலரும், புதுமணத் தம்பதியை வாழ்த்திச் சென்றனர். போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்து, இருதரப்பு பெற்றோரையும் அழைத்து, சமரசம் செய்து, பதிவு திருமணம் நடத்தி வைப்பதாக, சிவசேனா அமைப்பினர் தெரிவித்தனர்.