வேதாரண்யம்: வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையிலுள்ள தில்லை மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நேற்று நடந்தது. முன்னதாக, கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த இரண்டு நாட்களாக யாகசாலை பூஜை நடந்தது. நேற்றுக்காலை 9.30 மணிக்கு யாகசாலை பூஜை நிறைவடைந்து, கடம் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து, 10 மணிக்கு கோபுர கலசங்களில் கும்பாபிஷேக புனித நீரை சிவாச்சாரியர்கள் ஊற்றினர். பின்னர், மூலவிக்கிரஷங்களுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. இதில், எம்.எல்.ஏ., காமராஜ் உள்பட சுற்றுவட்டார பக்தர்கள் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் திரளாக பங்கேற்று, வழிபட்டனர். ஏற்பாட்டை கோடியக்கரை கிராம மக்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.