ஆயுள், ஆரோக்கியம்பெற ஆயுஷ்ஹோமம் நடத்துவது நல்லது. பிரதோஷகாலத்தில் சிவ அபிஷேகத்திற்கு பசும்பால் கொடுப்பது ஆயுளை விருத்தி செய்யும் என காரணஆகமம் கூறுகிறது. மார்க்கண்டேயனுக்காக எமனைக் காலால் உதைத்த சிவனின் திருநாமமான சிவாயநம என ஜெபிப்பதும் நல்லது. தினமும் சூரிய வழிபாடு செய்தால் ஆரோக்கியத்துடன் நீண்டநாள் வாழும் பாக்கியம் உண்டாகும்.