பொள்ளாச்சி: பொள்ளாச்சியைஅடுத்த கரட்டுப்பாளையம் விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா நேற்றுமுன்தினம் நடந்தது. இதையொட்டி, கோவிலில் நான்காம் காலயாக பூஜை உட்பட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து யாகசாலையில் இருந்து கலசங்கள் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டன. பின்னர், கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டது. விமான கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, விநாயகப்பெருமானுக்கு மகாகும்பாபிஷேகம் நடந்தது. பகல் 11.00 மணியளவில் தசதானம், தசதரிசனம், மகாபிஷேகம், அலங்கார பூஜை, தீபாரதனை, யாக பூஜை காலங்களில் வேதசிவாகம திருமுறை பாராயணம் போன்றவை நடந்தன. தொடர்ந்து அன்னதானம் நடந்தது.